Sriman Narayaneeyam - Dasaka 22 - அஜாமிளன் சரிதம் (ச்லோகம் 231)
Dasaka 22 - அஜாமிளன் சரிதம்
இதீரிதைர்யாம்யபடைரபாஸ்ருதே பவத்படானாம் ச கணே திரோஹிதே பவத் ஸ்ம்ருதிம் கஞ்சன காலமாசரன் பவத்பதம் ப்ராபி பவத்படைரஸௌ இதி ஈரிதை: யாம்ய படை: அபாஸ்ருதே பவத் படானாம் ச கணே திரோஹிதே பவத் ஸ்ம்ருதிம் கஞ்சன காலம் ஆசரன் பவத் பதம் ப்ராபி பவத் படை: அஸௌ इतीरितैर्याम्यभटैरपासृते भवद्भटानां च गणे तिरोहिते । भवत्स्मृतिं कञ्चन कालमाचरन भवत्पदं प्रापि भवद्भटैरसौ
குருவாயூரப்பா! இப்படியாக உனது தூதர்கள் கூறியதும், யமதூதர்கள் மறைந்தனர். உனது தூதர்களும் மறைந்தனர். அதன் பின்னர் அஜாமிளன் சிறிது காலம் உன்னைத் தனது மனதில் த்யானம் செய்தான். இறுதியில் உனது தூதர் படையால் பரமபதத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான் அல்லவா?