Sriman Narayaneeyam - Dasaka 22 - அஜாமிளன் சரிதம் (ச்லோகம் 230)

Dasaka 22 - அஜாமிளன் சரிதம்

ந்ருணாமபுத்யாபி முகுந்த கீர்த்தனம் தஹத்யகௌகான் மஹிமாஸ்ய தாத்ருச: யதாக்னிரேதாம்ஸி யதௌஷதம் கதான் இதி ப்ரபோ த்வத் புருஷா பபாஷிரே ந்ருணாம் அபுத்யாபி முகுந்த கீர்த்தனம் தஹதி அத ஔகான் மஹிமா அஸ்ய தாத்ருச: யதா அக்னி: ஏதாம்ஸி யதா ஓளஷதம் கதான் இதி ப்ரபோ த்வத் புருஷா பபாஷிரே नृणामबुद्ध्यापि मुकुन्दकीर्तनं दहत्यघौघान् महिमास्य तादृशः । यथाग्निरेधांसि यथौषधं गदानिति प्रभो त्वत्पुरुषा बभाषिरे

குருவாயூரப்பா! உனது தூதர்கள், “நெருப்பு விறகுகளை எப்படி எரிக்கின்றதோ, மருந்தானது வ்யாதிகளை எப்படி நீக்குகின்றதோ அது போன்று, மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாபங்கள் அனைத்தும் முகுந்தனின் திருநாமத்தைக் கூறினால் எரிந்துவிடும். இந்த நாமத்தின் மஹிமை அது”, என்றனர்.