Sriman Narayaneeyam - Dasaka 22 - அஜாமிளன் சரிதம் (ச்லோகம் 229)

Dasaka 22 - அஜாமிளன் சரிதம்

அனேன போ ஜன்ம ஸஹஸ்ர கோடிபி: க்ருதேஷு பாபேஷ்வபி நிஷ்க்ருதி: க்ருதா யதக்ரஹீந்நாம பயாகுலோ ஹரே இதி ப்ரபோ த்வத்புருஷா பபாஷிரே அனேன போ ஜன்ம ஸஹஸ்ர கோடிபி: க்ருதேஷு பாபேஷு அபி நிஷ்க்ருதி: க்ருதா யத் அக்ரஹீத் நாம பய ஆகுல: ஹரே: இதி ப்ரபோ த்வத் புருஷா பபாஷிரே अनेन भो जन्मसहस्रकोटिभिः कृतेषु पापेष्वपि निष्कृतिः कृता । तदग्रहीन्नाम भयाकुलो हरेरिति प्रभो त्वत्पुरुषा बभाषिरे

குருவாயூரப்பா! உனது தூதர்கள் மேலும், “யமதூதர்களே! இவன் தனது ஆயிரம் கோடி ஜன்மங்களில் செய்த பாபங்கள் கூட இப்போது செய்த பரிகாரத்தால் நீக்கப்பட்டது. என்ன பரிகாரம்? மரண பயத்தில் கலங்கி எப்போது ஸ்ரீஹரியின் திருநாமத்தை உச்சரித்தானோ அதுவே பரிகாரம் ஆகும்”, என்றனர்.