Sriman Narayaneeyam - Dasaka 22 - அஜாமிளன் சரிதம் (ச்லோகம் 228)
Dasaka 22 - அஜாமிளன் சரிதம்
ச்ருதி ஸ்ம்ருதிப்யாம் விஹிதா வ்ரதாதய: புநந்தி பாபம் ந லுனந்தி வாஸனாம் அநந்த ஸேவா து நிகருந்ததி த்வயீம் இதி ப்ரபோ த்வத்புருஷா பபாஷிரே ச்ருதி ஸ்ம்ருதிப்யாம் விஹிதா வ்ரதாதய: புநந்தி பாபம் ந லுனந்தி வாஸனாம் அநந்த ஸேவா து நிகருந்ததி த்வயீம் இதி ப்ரபோ த்வத் புருஷா பபாஷிரே श्रुतिस्मृतिभ्यां विहिता व्रतादयः पुनन्ति पापं न लुनन्ति वासनाम् । अनन्तसेवा तु निकृन्तति द्वयीमिति प्रभो त्वत्पुरुषा बभाषिरे
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது தூதர்கள், “சாஸ்திரங்களில் கூறப்பட்ட விரதங்கள் அனைத்தும் பாபத்தை மட்டுமே நீக்கவல்லவை ஆகும். ஆனால் அவை எதுவும் பாபத்தைத் தூண்டும் எண்ணங்களை (வாஸனை) நீக்குவதில்லை. பகவானின் திருநாம ஸங்கீர்த்தனம் மற்றும் அவன் தரிசனம் மட்டுமே பாபம் மற்றும் பாபம் செய்யும் எண்ணம் ஆகிய இரண்டையும் நீக்கவல்லது”, என்றனர்.