Sriman Narayaneeyam - Dasaka 22 - அஜாமிளன் சரிதம் (ச்லோகம் 227)

Dasaka 22 - அஜாமிளன் சரிதம்

பவந்து பாபானி கதம் து நிஷ்க்ருதே க்ருதேSபி போ தண்டனமஸ்தி பண்டிதா: ந நிஷ்க்ருதி: கிம் விதிதா பவாத்ருசாம் இதி ப்ரபோ த்வத் புருஷா பபாஷிரே பவந்து பாபானி கதம் து நிஷ்க்ருதே க்ருதே அபி போ தண்டனம் அஸ்தி பண்டிதா: ந நிஷ்க்ருதி: கிம் விதிதா பவாத்ருசாம் இதி ப்ரபோ த்வத் புருஷா பபாஷிரே भवन्तु पापानि कथं तु निष्कृते कृतेऽपि भो दण्डनमस्ति पण्दिताः । न निष्कृतिः किं विदिता भवादृशामिति प्रभो त्वत्पुरुषा बभाषिरे

ப்ரபுவே! குருவாயூரப்பா! உன்னுடைய தூதர்கள் யமனின் தூதர்களை நோக்கி, “தர்மம் அறிந்தவர்களே! அவன் பாபம் செய்தது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் அந்தப் பாபங்களுக்கான பரிகாரம் செய்த பின்னரும், தண்டனை எப்படி உண்டாகும்? நீங்கள் பாபங்களுக்கும் பரிகாரம் உண்டு என்பதை அறியவில்லையா?”, என்று கூறினர்.