Sriman Narayaneeyam - Dasaka 22 - அஜாமிளன் சரிதம் (ச்லோகம் 226)

Dasaka 22 - அஜாமிளன் சரிதம்

அமும் ச ஸம்பாச்ய விகர்ஷதோ படான் விமுஞ்சதேத்யாருருதுர்பலாதமீ நிவாரிதாஸ்தே ச பவஜ்ஜனைஸ்ததா ததீயபாபம் நிகிலம் ந்யவேதயன் அமும் ச ஸம்பாச்ய விகர்ஷத: படான் விமுஞ்சத இதி ஆருருது: பலாத் அமீ நிவாரிதா: தே ச பவத் ஜனை: ததா ததீய பாபம் நிகிலம் ந்யவேதயன் अमुं च संपाश्य विकर्षतो भटान् विमुञ्चतेत्यारुरुधुर्बलादमी । निवारितास्ते च भवज्जनैस्तदा तदीयपापं निखिलं न्यवेदयन्

குருவாயூரப்பா! அஜாமிளனை யமதூதர்கள் தங்கள் பாசக்கயிற்றால் கட்டி முரட்டுத்தனமாக இழுப்பதை உனது தூதர்கள் கண்டனர். அவர்கள் யமதூதர்களிடம், “அவனை விட்டு வாருங்கள்”, என்றனர். யமதூதர்கள் மறுக்கவே, அவர்களை உனது தூதர்கள் பலாத்காரமாக தடுத்தனர். அப்போது யமனின் தூதர்கள் அஜாமிளன் செய்த பாபங்களை உனது தூதர்களிடம் வரிசையாகக் கூறினர்.