Sriman Narayaneeyam - Dasaka 22 - அஜாமிளன் சரிதம் (ச்லோகம் 224)

Dasaka 22 - அஜாமிளன் சரிதம்

ஸ ம்ருத்யுகாலே யமராஜ கிங்கரான் பயங்கராம்ஸ்த்ரீநபிலக்ஷயன் பியா புரா மனாக் த்வத் ஸ்ம்ருதிவாஸனா பலாத் ஜுவாஹ நாராயண நாமகம் ஸுதம் ஸ ம்ருத்யுகாலே யமராஜ கிங்கரான் பயங்கரான் த்ரீன் அபிலக்ஷயன் பியா புரா மனாக் த்வத் ஸ்ம்ருதி வாஸனா பலாத் ஜுவாஹா நாராயண நாமகம் ஸுதம் स मृत्युकाले यमराजकिङ्करान् भयङ्करांस्त्रीनभिलक्षयन् भिया । पुरा मनाक्त्वत्स्मृतिवासनाबला – ज्जुहाव नारायणनामकं सुतम्

குருவாயூரப்பா! வயதான நிலையில், இறக்கின்ற நேரத்தில் அஜாமிளன் கிடந்தான். அப்போது செய்த தீயசெயல்களின் காரணத்தால் அவன் உயிரை எடுக்க வந்த மூன்று யமதூதர்களைக் கண்டு அஞ்சினான். அப்போது தனது மகளான நாராயணனை, “நாராயணா” என்று அழைத்தான். இப்படி அந்த மகனுக்கு பெயர் வைத்ததும், இப்போது இந்த நேரத்தில் அவனை அழைத்ததும் இளவயதில் உன்னைக் குறித்து சிறிது அறிந்ததால் அல்லவா?