Sriman Narayaneeyam - Dasaka 22 - அஜாமிளன் சரிதம் (ச்லோகம் 223)

Dasaka 22 - அஜாமிளன் சரிதம்

ஸ்வத: ப்ரசாந்தோSபி ததாஹ்ருதாசய: ஸ்வதர்மமுத்ஸ்ருஜ்ய தயா ஸமாரமன் அதர்மகாரீ தசமீ பவந் புந: ததௌ பவந்நாமயுதே ஸுதே ரதிம் ஸ்வத: ப்ரசாந்த: அபி தத் ஆஹ்ருத அசய: ஸ்வ தர்மம் உத்ஸ்ருஜ்ய தயா ஸமாரமன் அதர்மகாரீ தசமீ பவந் புந: ததௌ பவத் நாம யுதே ஸுதே ரதிம் स्वतः प्रशान्तोऽपि तदाहृताशयः स्वधर्ममुत्सृज्य तया समारमन् । अधर्मकारी दशमी भवन् पुनर्दधौ भवन्नामयुते सुते रतिम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இயல்பாகவே தனது புலன்களை அடக்கத் தெரிந்தவனாக இருந்தாலும், அந்தப் பெண்ணால் தனது மனம் கவரப்பட்டான். இதனால் தன்னுடைய இல்லற தர்மங்களை விடுத்தவனாக, அவளுடன் சிற்றின்பம் அனுபவிக்கத் தொடங்கினான். தனது பத்தாவது தசையை அடைந்த பின்னரும் தீய செயல்களையே செய்து வந்தான். ஆனாலும் உன் பெயர் கொண்ட நாராயணன் என்னும் மகன் மீது மிகவும் ஆசையாக இருந்தான்.