Sriman Narayaneeyam - Dasaka 22 - அஜாமிளன் சரிதம் (ச்லோகம் 222)

Dasaka 22 - அஜாமிளன் சரிதம்

அஜாமிளோ நாம மஹீஸுர: புரா சரந் விபோ தர்மபதான் க்ருஹாச்ரமீ குரோர்கிரா கானனமேத்ய த்ருஷ்ட்வான் ஸுத்ருஷ்டசீலாம் குலடாம் மதாகுலம் அஜாமிளோ நாம மஹீஸுர: புரா சரந் விபோ தர்மபதான் க்ருஹாச்ரமீ குரோ: கிரா கானனம் ஏத்ய த்ருஷ்ட்வான் ஸுத்ருஷ்டசீலாம் குலடாம் மதாகுலம் अजामिळो नाम महीसुरः पुरा चरन् विभो ! धर्मपथान् गृहाश्रमी । गुरोर्गिरा काननमेत्य दृष्टवान् घृष्टशीलां कुलटां मदाकुलाम्

முன்பு ஒரு காலகட்டத்தில் அஜாமிளன் என்ற ப்ராஹ்மணன், க்ருஹஸ்தனாக இல்லற தர்மத்தைச் செவ்வனே கடைபிடித்து வாழ்ந்து வந்தான். மிகவும் தர்மவானாக இருந்தான். ஒருநாள் தனது தந்தையின் சொல்லிற்கு இணங்க அவன் காட்டிற்குச் சென்றான். அங்கு வெட்கமே இல்லாதவளும், பிறந்த குலத்தால் அறிவில்லாதவளும் ஆகிய ஓர் விபசாரியைக் கண்டான் (விளக்கம் காண்க).

ஸ்ரீமத்பாகவதத்தின் ஆறாம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 1 முதல் 3 முடிய, இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளன.