Sriman Narayaneeyam - Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும் (ச்லோகம் 221)
Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும்
பாதாள மூல புவி சேஷ தனும் பவந்தம் லோலைக குண்டல விராஜி ஸஹஸ்ரசீர்ஷம் நீலாம்பரம் த்ருதஹலம் புஜகாங்கனாபி: ஜுஷ்டம் பஜே ஹரகதான் குருகேஹநாத பாதாள மூல புவி சேஷ தனும் பவந்தம் லோல ஏக குண்டல விராஜி ஸஹஸ்ர சீர்ஷம் நீலாம்பரம் த்ருத ஹலம் புஜக அங்கனாபி: ஜுஷ்டம் பஜே ஹர கதான் குருகேஹ நாத पाताळमूलभुवि शेषतनुं भवन्तं लोकैककुण्डलविराजिसहस्रशीर्षम् । नीलाम्बरं धृतहलं भुजगाङ्गनाभिर्जुष्टं भजे हर गदान् गुरुगेहनाथ !
குருவாயூரப்பா! க்ருஷ்ணா! பாதாளலோகத்தின் அடிப்பகுதியில் ஆதிசேஷனாக உள்ளவனே! ஆயிரம் தலைகள் கொண்டவனே! ஒரு குண்டலத்தின் மூலம் அனைத்து தலைகளும் ப்ரகாசிக்கும்படி உள்ளவனே! நீல நிற ஆடை உடுத்தியவனே! நாகலோகத்தில் உள்ள பெண்களால் வணங்கப்படுபவனே! உன்னை நான் வணங்குகிறேன் , எனது நோய்களை நீக்குவாயாக.***