Sriman Narayaneeyam - Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும் (ச்லோகம் 220)
Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும்
ஸர்வைர் த்ருவாதிபிருடுப்ரகரைர் க்ரஹைச்ச புச்சாதிகேஷ்வவயவேஷ்வபிகல்ப்யமானை: த்வம் சிம்சுமாரவபுஷா மஹதாமுபாஸ்ய: ஸந்த்யாஸு ருந்தி நரகம் மம ஸிந்துசாயின் ஸர்வை: த்ருவ ஆதிபி: உடுப்ரகரை: க்ரஹை: ச புச்ச ஆதிகேஷு அவயவேஷு அபிகல்ப்யமானை: த்வம் சிம்சுமார வபுஷா மஹதாம் உபாஸ்ய: ஸந்த்யாஸு ருந்தி நரகம் மம ஸிந்துசாயின் सर्वैर्ध्रुवीदिभिरुडुप्रकरैर्ग्रहैश्च पुच्छादिकेष्ववयवेष्वभिकल्प्यमानैः । त्वं शिंशुमारवपुषा महतामुपास्यः सन्ध्यासु रुन्धि नरकं मम सिन्धुशायैन्
திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவனே! குருவாயூரப்பா! வால் உள்பட பல உடல் உறுப்புகளில், துருவ நட்சத்திரம் உள்பட பல நட்சத்திரங்களும் கிரகங்களும் சேர்ந்து ஒரு முதலை வடிவமாக உள்ளன. முனிவர்கள் சந்த்யாகால வேளையில் இப்படியாக உள்ள உன்னை த்யானிக்கின்றனர். இப்படிப்பட்ட நீ, நரகத்திற்கு இணையான எனது வ்யாதியை நீக்கவேண்டும் (சிம்சு மாரம் என்பது முதலை ஆகும். இந்த உருவில் பரம்பொருள் ஆகாயத்தில் உள்ளான். அவனது திருமேனியில் சூரியன், நட்சத்திரங்கள் போன்றவை உள்ளன. இப்படிப்பட்ட உருவத்தை சாயங்கால வேளையில் த்யானித்தால் நரகவேதனை அண்டாது. தனது வ்யாதிகளை நரக வேதனையாக பட்டத்ரி கூறுகிறார்).