Sriman Narayaneeyam - Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும் (ச்லோகம் 219)

Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும்

ப்லாக்ஷேSர்க்கரூபமயி சால்மல இந்துரூபம் த்வீபே பஜந்தி குசநாமனி வஹ்நிரூபம் க்ரௌஞ்சேSம்புரூபமத வாயுமயம் ச சாகே த்வாம் ப்ரஹ்மரூபமபி புஷ்கரநாம்னி லோகா: ப்லாக்ஷே அர்க்க ரூபம் அயி சால்மல இந்துரூபம் த்வீபே பஜந்த குச நாமனி வஹ்நிரூபம் க்ரௌஞ்சே அம்பு ரூபம் அத வாயு மயம் ச சாகே த்வாம் ப்ரஹ்ம ரூபம் அயி புஷ்கர நாம்னி லோகா: प्लाक्षेऽर्करूपमयि शाल्मल इन्दुरूपं द्वीये भजन्ति कुशनामनि वह्निरूपम् । क्रौञ्चेऽम्बुरूपमथ वायुमयं च शाके त्वां ब्रह्मरूपमयि पुष्करनाम्नि लोकाः

குருவாயூரப்பா! உன்னை பிலக்ஷ த்வீபத்தில் உள்ளவர்கள் சூர்யனாகவும் (அர்க்கரூபம்), சால்மல த்வீபத்தில் சந்திரனாகவும் (இந்துரூபம்), குச த்வீபத்தில் அக்னியாகவும் (அஹ்நிரூபம்), க்ரௌஞ்ச த்வீபத்தில் நீராகவும் (அம்புரூபம்), சாக த்வீபத்தில் வாயுவாகவும், புஷ்கர த்வீபத்தில் ப்ரஹ்மமாகவும் வணங்குகின்றனர்.