Sriman Narayaneeyam - Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும் (ச்லோகம் 218)
Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும்
ஸ்ரீநாரதேந ஸஹ பாரத கண்டமுக்யை: த்வம் ஸாங்க்யயோகநுதிபி: ஸமுபாஸ்யமான: ஆகல்பகாலமிஹ ஸாதுஜநாபிரக்ஷீ நாராயணோ நரஸக: பரிபாஹி பூமன் ஸ்ரீநாரதேந ஸஹ பாரத கண்ட முக்யை: த்வம் ஸாங்க்ய யோக நுதிபி: ஸமுபாஸ்யமான: ஆகல்ப காலம் இஹ ஸாதுஜந அபிரக்ஷீ நாராயண: நரஸக: பரிபாஹி பூமன் श्रीनारदेन सह भारतखण्डमुख्यैस्त्वं सांख्ययोगनुतिभिस्समुपास्यमानः । आकल्पकालमिह साधुजनाभिरक्षी नारायणो नरसखः परिपाहि भूमन्
குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! நீ இந்தப் பாரத கண்டத்தில் உள்ள சிறந்த ஞானிகளுடன் நாரதரும் சேர்ந்து யோகத்தாலும், மந்திரங்களாலும் உபாஸிக்கப்படுகிறாய். இப்படிப்பட்ட நீ ப்ரளயகாலம் முடியும்வரை இந்த உலகில் உள்ள அனைவரையும் காப்பாற்றி வருகிறாய். நரனைத் தோழனாகவும், நாராயணன் என்று பெயர் கொண்டவனும் ஆகிய நீ (நரநாராயணன்) என்னைக் காக்க வேண்டும்.