Sriman Narayaneeyam - Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும் (ச்லோகம் 217)

Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும்

யாம்யாம் திசம் பஜதி கிம்புருஷாக்ய வர்ஷே ஸம்ஸேவிதோ ஹநுமதா த்ருட பக்தி பாஜா ஸீதாபிராம பரமாத்புத ரூபசாலீ ராமாத்மக: பரிலஸந் பரிபாஹி விஷ்ணே யாம்யாம் திசம் பஜதி கிம்புருஷ ஆக்ய வர்ஷே ஸம்ஸேவித: ஹநுமதா த்ருட பக்தி பாஜா ஸீதா அபிராம பரம அத்புத ரூப சாலீ ராமாத்மக: பரிலஸந் பரிபாஹி விஷ்ணே याम्यां दिशं भजति किंपुरुषाख्यवर्षे संसेवितो हनुमता दृढभक्तिभाजा । सीताभिरामपरमाद्भुतरूपशाली रामात्मकः परिलसन्परिपाहि विष्णो

விஷ்ணுவே! குருவாயூரப்பா! இளாவ்ருத வர்ஷத்திற்குத் தெற்கில் உள்ள வர்ஷம் கிம்புருஷம் என்பதாகும். அங்கு மாறாத பக்தியுள்ள ஆஞ்சநேயரால் வணங்கப்படுபவனும், சீதையின் மனதிற்கு மிகவும் பிரியமான இனிய அழகோடு உள்ள அற்புதமான உருவம் உடையவனும், ஸ்ரீராமனாகவும் உள்ள நீ என்னை காக்க வேண்டும்.