Sriman Narayaneeyam - Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும் (ச்லோகம் 216)

Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும்

கிஞ்சோத்தரேஷு குருஷு ப்ரியயா தரண்யா ஸம்ஸேவிதோ மஹிதமந்த்ரநுதி ப்ரபேதை: தம்ஷ்ட்ராக்ர க்ருஷ்ட கனப்ருஷ்ட கரிஷ்ட வர்ஷ்மா த்வம் பாஹி விஜ்ஞநுத யஜ்ஞவராஹ மூர்த்தே கிம் ச உத்தரேஷு குருஷு ப்ரியயா தரண்யா ஸம்ஸேவித: மஹித மந்த்ர நுதி ப்ரபேதை: தம்ஷ்ட்ராக்ர க்ருஷ்ட கன ப்ருஷ்ட கரிஷ்ட வர்ஷ்மா த்வம் பாஹி விஜ்ஞ நுத யஜ்ஞ வராஹ மூர்த்தே किं चोत्तरेषु कुरुषु प्रियया धरण्या संसेवितो महितमन्त्रनुतिप्रभेदैः । दंष्ट्राग्रघृष्टघनपृष्ठगरिष्ठवर्ष्मा त्वं पाहि विज्ञनुतयज्ञवराहमूर्ते

உயர்ந்த ஞானம் உடையவர்களால் துதிக்கப்படும் வராஹமூர்த்தியே! குருவாயூரப்பா! இளாவ்ருத வர்ஷத்தின் வடக்கே உள்ள வர்ஷம் உத்தரகுரு என்பதாகும். அங்கு உனது ப்ரியமான துணைவியான பூதேவி உன்னை ச்லோகங்களாலும், மந்திரங்களாலும் ஆராதித்து வருகிறாள். அவளால் ஆராதிக்கப்படுபவனும், தெத்திப் பற்கள் மேகத்தின் அடிப்பகுதியைத் தொடும் அளவிற்கு பெருத்த உடல் உடையவனும் ஆகிய நீ என்னைக் காக்கவேண்டும்.