Sriman Narayaneeyam - Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும் (ச்லோகம் 215)

Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும்

வர்ஷம் ஹிரண்மய ஸமாஹ்வயமௌத்தராஹம் ஆஸீநமத்ரி த்ருதி கர்மட காமடாங்கம் ஸம்ஸேவதே பித்ருகணே ப்ரவரோSர்யமா யம் தம் த்வாம் பஜாமி பகவன் பரசின்மயாத்மன் வர்ஷம் ஹிரண்மய ஸமாஹ்வயம் ஔத்தராஹம் ஆஸீநம் அத்ரி த்ருதி கர்மட காமட அங்கம் ஸம்ஸேவதே பித்ருகணே ப்ரவர: அர்யமா யம் தம் த்வாம் பஜாமி பகவந் பரசிந் மயாத்மந் वर्षं हिरण्मयसमाह्वयमौत्तराह - मासीनमद्रिधृतिकर्मठकामठाङ्गम् । संसेवते पितृगणप्रवरोऽर्यमाऽयं तं त्वां भजामि भगवन् परचिन्मयात्मन्

ஞானமே உருவாக உள்ள பகவானே! குருவாயூரப்பா! இளாவ்ருத வர்ஷத்தின் வடக்கில் உள்ள வர்ஷம் ஹிரண்மயம் என்பதாகும். அங்கு உள்ள மந்தர மலையைத் தாங்குபவனும், ஆமையின் உருவம் உடையவனும் ஆகிய உன்னைப் பித்ருக்களில் தலை சிறந்தவரான அர்யமா என்பவர் ஆராதனை செய்து வருகிறார். இப்படிப்பட்ட உன்னை நான் வணங்குகிறேன்.