Sriman Narayaneeyam - Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும் (ச்லோகம் 214)

Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும்

ரம்யே ஹ்யுதீசி கலு ரம்யக நாம்னி வர்ஷே தத் வர்ஷநாத மநுவர்ய ஸபர்யமாணாம் பக்தைக வத்ஸலமமத்ஸர ஹ்ருத்ஸு பாந்தம் மத்ஸ்யாக்ருதிம் புவநநாத பஜே பவந்தம் ரம்யே ஹி உதீசி கலு ரம்யக நாம்னி வர்ஷே தத் வர்ஷ நாத மநுவர்ய ஸபர்யமாணாம் பக்த ஏக வத்ஸலம் அமத்ஸர ஹ்ருத்ஸு பாந்தம் மத்ஸ்ய ஆக்ருதிம் புவநநாத பஜே பவந்தம் रम्ये ह्युदीचि खलु रम्यकनाम्नि वर्षे तद्वर्षनाथमनुवर्यसपर्यमाणम् । भक्तैकवत्सलममत्सरहृत्सु भान्तं मत्स्याकृतिं भुवननाथ भजे भवन्तम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! விச்வத்தின் நாதனே! இளாவ்ருத வர்ஷத்தின் வடக்கில் உள்ள வர்ஷம் ரம்யகம் என்பதாகும். பெயருக்கு ஏற்றாற்போல் அழகான இடமாகும். அந்த இடத்தில், அந்த வர்ஷத்தின் அதிபதியான மனுவால் வணங்கப்படுபவனும், அடியார்களிடம் எப்போதும் ப்ரியமாக உள்ளவனும், பொறாமை குணம் இல்லாதவர்கள் மனதில் ப்ரகாசமாக உள்ளவனும், மச்ச (மீன்) உருவம் உடையவனும் ஆகிய உன்னை வணங்குகிறேன்.