Sriman Narayaneeyam - Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும் (ச்லோகம் 213)
Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும்
வர்ஷே ப்ரதீசி லலிதாத்மநி கேதுமாலே லீலா விசேஷ லலிதஸ்மித சோபநாங்கம் லக்ஷ்ம்யா ப்ரஜாபதிஸுதைச்ச நிஷேவ்யமாணம் தஸ்யா: ப்ரியாய த்ருத காமதநும் பஜே த்வாம் வர்ஷே ப்ரதீசி லலித ஆத்மனி கேதுமாலே லீலா விசேஷ லலித ஸ்மித சோபந அங்கம் லக்ஷ்ம்யா ப்ரஜாபதிஸுதை: ச நிஷேவ்யமாணம் தஸ்யா: ப்ரியாய த்ருத காமதநும் பஜே த்வாம் वर्षे प्रतीचि ललितात्मनि केतुमाले लीलाविशेषललितस्मितशोभनाङ्गम् । लक्ष्म्या प्रजापतिसुतैश्च निषेव्यमाणं तस्याः प्रियाय धृतकामतनुं भजे त्वाम्
(இது மஹாலக்ஷ்மியைக் குறித்த ஸ்லோகம் ஆகும். இதனைப் படிப்பவர்களுக்கு நல்ல கணவனும் தம்பதிகள் அன்யோன்யமாகவும் இருப்பார்கள்). குருவாயூரப்பா! இளாவ்ருத வர்ஷத்திற்கு மேற்கில் உள்ள வர்ஷமானது கேதுமாலம் என்பதாகும். இங்கு தனது லீலைகளாலும், புன்னகையாலும், ஒளிவீசும் உடலுடைய மஹாலக்ஷ்மியாலும், ப்ரும்மாவின் புத்திரர்களாலும் வணங்கப்படுவது யார்? அத்தகைய மஹாலக்ஷ்மிக்காக மன்மதனின் உருவம் உடையவனான பரம்பொருளே! அத்தகைய உருவம் உடைய உன்னை த்யானிக்கிறேன்.