Sriman Narayaneeyam - Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும் (ச்லோகம் 212)
Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும்
த்யாயாமி தக்ஷிணகதே ஹரிவர்ஷ வர்ஷே ப்ரஹ்லாத முக்ய புருஷை: பரிஷேவ்யமாணம் உத்துங்க சாந்த தவளாக்ருதிமேக சுத்த ஞாநப்ரதம் நரஹரிம் பகவன் ப்ரபத்யே த்யாயாமி தக்ஷிணகதே ஹரிவர்ஷ வர்ஷே ப்ரஹ்லாத முக்ய புருஷை: பரிஷேவ்யமாணம் உத்துங்க சாந்த தவள ஆக்ருதிம் ஏக சுத்த ஞாநப்ரதம் நரஹரிம் பகவன் ப்ரபத்யே ध्यायामि दक्षिणगते हरिवर्षवर्षे प्राह्लादमुख्यपुरुषैः परिषेव्यमाणम् । उत्तुङ्गशान्तधवलाकृतिमेकशुद्ध - ज्ञानप्रदं नरहरिं भगवन् ! भवन्तम्
(இது நரஸிம்ஹப் பெருமாளைக் குறித்து உள்ளதாகும்). பகவானே! குருவாயூரப்பா! இளாவ்ருத வர்ஷத்திற்குத் தெற்கில் உள்ள வர்ஷமானது, ஹரிவர்ஷம் என்பதாகும். அங்கு ப்ராஹ்லாதனைத் தலைமையாகக் கொண்ட பலராலும் வணங்கப்படுபவனும், உயர்ந்தும், சாந்தமாகவும், வெண்மையாகவும் உள்ள உருவம் உடையவனும், உயர்ந்த ஞானத்தை அளிப்பவனும், நரஸிம்ஹனாகவும் உள்ள உன்னிடம் சரண் அடைகிறேன்.