Sriman Narayaneeyam - Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும் (ச்லோகம் 211)

Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும்

பத்ராச்வ நாமக இளாவ்ருத பூர்வ வர்ஷே பத்ரச்ரவோபி: ரிஷிபி: பரிணூயமாநம் கல்பாந்த கூட நிகமோத்தரண ப்ரவீணம் த்யாயாமி தேவ ஹயசீர்ஷநும் பவந்தம் பத்ராச்வ நாமக இளாவ்ருத பூர்வ வர்ஷே பத்ரச்ரவோபி: ரிஷிபி: பரிணூயமாநம் கல்பாந்த கூட நிகம உத்தரண ப்ரவீணம் த்யாயாமி தேவ ஹயசீர்ஷநும் பவந்தம் भद्राश्वनामक इळावृतपूर्ववर्षे भद्रश्रवोभिरृषिभिः परिणूयमानम् । कल्पान्तगूढनिगमोद्धरणप्रवीणं ध्यायामि देव हयशीर्षतनुं भवन्तम्

(இது ஹயக்ரீவரைக் குறித்ததாக உள்ளதால் படிக்கும் யாவருக்கும் சிறந்த கல்வி வளம் கிடைக்கப்பெறும் என்பது அடியேனது எண்ணம்). தேவர்களின் தேவனே! குருவாயூரப்பா! இளாவ்ருத வர்ஷத்தின் கிழக்கில் உள்ள மற்றொரு வர்ஷம் பத்ராச்வம் என்பதாகும். இங்கு உள்ள பத்ரச்ரவஸர்கள் என்னும் முனிவர்களால் போற்றப்படுபவனும், கல்பத்தின் முடிவில் மது என்ற அசுரன் ப்ரும்மாவிடம் இருந்து அபகரித்துச் சென்ற வேதங்களை மீட்டுக் கொடுத்த வல்லவனும், ஹயக்ரீவமாக உருவம் உடையவனும் (ஹயம் என்றால் குதிரை, க்ரீவம் என்றால் கழுத்து, ஆக குதிரையின் முகம் உடையவன்) ஆகிய உன்னைத் த்யானம் செய்கிறேன்.