Sriman Narayaneeyam - Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும் (ச்லோகம் 210)
Dasaka 21 - பூ கண்டங்களும் ஆராதனைகளும்
மத்யோத்பவே புவ: இளாவ்ருத நாம்நி வர்ஷே கௌரீ ப்ரதாந வநிதாஜந மாத்ர பாஜி சர்வேண மந்த்ரநுதிபி: ஸமுபாஸ்யமாநம் ஸங்கர்ஷணாத்மகமதீச்வர ஸம்ச்ரயே த்வாம் மத்ய உத்பவே புவ: இளாவ்ருத நாம்நி வர்ஷே கௌரீ ப்ரதாந வநிதாஜந மாத்ர பாஜி சர்வேண மந்த்ர நுதிபி: ஸமுபாஸ்யமாநம் ஸங்கர்ஷண ஆத்மகம் அதீச்வர ஸம்ச்ரயே த்வாம் मध्योद्भवे भुव इळावृतनाम्नि वर्षे गौरीप्रधानवनिताजनमात्रभाजि । शर्वेण मन्त्रनुतिभिस्सुमुपास्यमानं सङ्कर्षणात्मकमधीश्वर संश्रये त्वाम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இந்த பூமியின் மத்தியில் இளாவ்ருதம் என்ற பெயர் கொண்ட பூகண்டம் உள்ளது. அங்கு பார்வதி மற்றும் பெண்களே உள்ளனர். (இது ஒரு சாபமாகும். அங்கு நுழையும் ஆண்கள் பெண்களாக மாறிவிடுவர்) அவ்விடத்தில் உள்ள பரமேச்வரனான சிவன் பல்வேறு மந்திரங்கள் கொண்டு உன்னை ஆராதித்து வருகிறார். ஸங்கர்ஷணனின் ரூபமான உன்னை நான் சரணம் புகுகிறேன். (விளக்கம் காண்க).
ஸ்ரீமத்பாகவதத்தின் ஐந்தாம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 16 முதல் 20 முடிய, இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளன.