Sriman Narayaneeyam - Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம் (ச்லோகம் 209)

Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம்

சயுவ்ரதம் கோம்ருக காகசர்யாம் சிரம் சரந்நாப்ய பரம் ஸ்வரூபம் தவாஹ்ருதாங்க: குடகாசலே த்வம் தாபாந் மமாபாகுரு வாதநாத சயு வ்ரதம் கோ ம்ருக காக சர்யாம் சிரம் சரந் ஆப்ய பரம் ஸ்வரூபம் தவா ஹ்ருத அங்க: குடகாசலே த்வம் தாபாந் மம அபாகுரு வாதநாத शयुव्रतं गोमृगकाकचर्यां चिरं चरन्नाप्य परं स्वरूपम् । दवाहृताङ्गः कुटकाचले त्वं तापान् ममापाकुरु वातनाथ

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ மலைப் பாம்பு போன்றும், (மலைப்பாம்பு வ்ரதம் என்றால் - அசையாமல் இருந்து தான் உள்ள இடம் தேடி வரும் உணவை உட்கொள்வது) காகம், பசு, மான் (கைகளால் உணவு உண்ணுதல் போன்றவை அல்லாமல்) போன்றும் வாழ்ந்தாய். இதன் பின்னர் பரம்பொருள் உருவம் பெற்றாய். அதன் பின்னர் குடகு மலையில் உண்டான காட்டுத் தீயினால் உடல் எரிந்தாய். நீ என்னுடைய வேதனைகளை நீக்க வேண்டும்.***