Sriman Narayaneeyam - Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம் (ச்லோகம் 206)
Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம்
நவாபவாந் யோகிவரா நவாந்யே தவபாலயந் பாரதவர்ஷகண்டான் ஸௌகா த்வசீதிஸ்தவ சேஷ புத்ரா: தபோபலாத் பூஸுரபூயமீயு: நவ அபவாந் யோகிவரா: ந அந்யே தவ அபாலயந் பாரதவர்ஷகண்டான் ஸௌகா து அசீதி: தவ சேஷ புத்ரா: தபோபலாத் பூஸுரபூயம் ஈயு: नवाभवन्योगिवरा नवान्ये त्वपालयन्भारतवर्षखण्डान् । सैका त्वशीतिस्तव शेषपुत्रा – स्तपोबलाद्भूसुरभूयमीयुः
குருவாயூரப்பா! உனது நூறு புத்திரர்களில், ஒன்பது புத்திரர்கள் மிகச் சிறந்த தவ யோகிகளாக விளங்கினர். (அவர்கள் - கவி, ஹரி, அந்தரிக்ஷன், ப்ரபுத்தன், ஆவிர்ஹோத்ரன், த்ரமிடன், சமசன் மற்றும் காபாஜனன் ஆகியோர்) மேலும் ஒன்பது புத்திரர்கள் பரதவர்ஷத்தினைச் சேர்ந்த ஒன்பது கண்டங்களை ஆண்டனர். (அவர்கள் -குசாவர்த்தனன், இளாவர்த்தன், ப்ரம்மாவர்த்தன், மலயன், கேது, பத்ரசேனன், இந்த்ர ஸ்ப்ருக், விதர்ப்பன் மற்றும் சீகடன்). மீதம் உள்ள (எண்பத்து இரண்டு) புத்திரர்களும் தவ வலிமையால் ப்ராமணர்கள் ஆனார்கள் அல்லவா?