Sriman Narayaneeyam - Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம் (ச்லோகம் 205)

Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம்

ஜிதேந்த்ரதத்தாம் கமநீம் ஜயந்தீம் அதோத்வஹந்நாத்மரதாசயோSபி அஜீஜநஸ்தத்ர சதம் தநூஜாத் ஏஷாம் க்ஷிதீசோ பரதோSக்ர ஜந்மா ஜிதேந்த்ர தத்தாம் கமநீம் ஜயந்தீம் அத உத்வஹந் ஆத்மரத ஆசய: அபி அஜீஜந: தத்ர சதம் தநூஜாந் ஏஷாம் க்ஷிதீச: பரத: அக்ர ஜந்மா जितेन्द्रदत्तां कमनीं जयन्ती – मथोद्वहन्नात्मरताशयोऽपि । अजीजनत्तत्र शतं तनूजान्येषां क्षितीशो भरतोऽग्रजन्मा

குருவாயூரப்பா! உன்னால் வெல்லப்பட்ட இந்திரன் மனம் திருந்தி தனது மகளான ஜெயந்தியை ரிஷபதேவரான உனக்கு மணம் முடித்தான். அவளுடன் நீயும் இன்பமாக விளங்கினாய். அவள் மூலமாக நூறு குழந்தைகள் பிறந்தன. அவர்களில் மூத்தவனான பரதன் என்பவன் பூமிக்கே அதிபதியாக ஆனான் அல்லவோ? (அவன் பெயரால்தான் பாரதவர்ஷம் என்று அழைக்கப்படுகிறது).