Sriman Narayaneeyam - Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம் (ச்லோகம் 204)

Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம்

இந்த்ரஸ்த்வதுத்கர்ஷ க்ருதாதமர்ஷாத் தவவர்ஷ நாஸ்மிந்நஜநாபவர்ஷே யதா ததா த்வம் நிஜயோக சக்த்யா ஸ்வவர்ஷமேநத் வ்யததா: ஸுவர்ஷம் இந்த்ர: த்வத் உத்கர்ஷ க்ருதாத் அமர்ஷாத் தவவர்ஷ ந அஸ்மிந் அஜநாபவர்ஷே யதா ததா த்வம் நிஜயோக சக்த்யா ஸ்வவர்ஷம் ஏநத் வ்யததா: ஸுவர்ஷம் इन्द्रस्त्वदुत्कर्षकृतादमर्षा – द्ववर्ष नास्मिन्नजनाभवर्षे । यदा तदा त्वं निजयोगशक्त्या स्ववर्षमेनद्व्यदधास्सुवर्षम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ரிஷபதேவரான உன்னுடைய மகிமையையும் புகழையும் கண்டு இந்திரன் பொறாமை கொண்டான். இதனால் அஜநாபம் என்ற இந்தப் பூமியில் மழை பெய்வதை நிறுத்தினான். அப்போது நீ உன்னுடைய யோக சக்தியின் வலிமையால் மழையைப் பொழிய வைத்தாய் அல்லவா?