Sriman Narayaneeyam - Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம் (ச்லோகம் 203)
Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம்
த்வயி த்ரிலோகீப்ருதி ராஜ்யபாரம் நிதாய நாபி: ஸஹ மேருதேவ்யா தபோவனம் ப்ராப்ய பவந்நிஷேவீ கத: கிலாநந்தபதம் பதம் தே த்வயி த்ரிலோகீப்ருதி ராஜ்ய பாரம் நிதாய நாபி: ஸஹ மேருதேவ்யா தபோவனம் ப்ராப்ய பவத் நிஷேவீ கத: கில ஆநந்தபதம் பதம் தே त्वयि त्रिलोकीभृति राज्य्भारं निधाय नाभिस्सह मेरुदेव्या । तपोवनं प्राप्य भवन्निषेवी गतः किलानन्दपदं पदं ते
குருவாயூரப்பா! மூன்று உலகங்களையும் தாங்கி நிற்கும் உன்னிடம் (ரிஷபன்) தனது ராஜ்யத்தினை நாபி ஒப்படைத்தான். அதன் பின்னர் தனது மனைவியான மேருதேவியுடன் தவம் செய்ய காட்டிற்குச் சென்றான். அங்கு உன்னையே ஆராதனை செய்து கொண்டு, அதன் பிறகு உரிய காலத்தில், ஆனந்தம் நிரம்பியுள்ள உனது இடமான பரமபதத்தை அடைந்தான்.