Sriman Narayaneeyam - Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம் (ச்லோகம் 202)
Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம்
நாபி ப்ரயாயாமத மேருதேவ்யாம் த்வமம்சதோSபூ: ரிஷபாபிதான: அலோக ஸாமான்ய குண ப்ரபாவ ப்ரபாவிதாசேஷ ஜநப்ரமோத: நாபி ப்ரயாயாம் அத மேருதேவ்யாம் த்வம் அம்சத: அபூ: ரிஷப அபிதான: அலோக ஸாமான்ய குண ப்ரபாவ ப்ரபாவித அசேஷ ஜநப்ரமோத: नाभिप्रियायामथ मेरुदेव्यां त्वमंशतोऽभूरृषभाभिधानः । अलोकसामान्यगुणप्रभाव – प्रभाविताशेषजनप्रमोदः
குருவாயூரப்! அதன் பின்னர் நீ நாபியின் அன்பு மனைவியான மேருதேவி என்பவளிடம், இந்த உலகில் உள்ள மக்களிடத்தில் காணப்படாத குணங்களுடனும், பெருமைகளுடனும், அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும்படியான உன்னுடைய அம்சமான ரிஷபன் என்ற பெயர் கொண்டு தோன்றினாய்.