Sriman Narayaneeyam - Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம் (ச்லோகம் 201)

Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம்

அபிஷ்டுதஸ்தத்ர முநீச்வரைஸ்த்வம் ராஜ்ஞ: ஸ்வதுல்யம் ஸுதமர்த்யமான: ஸ்வயம் ஜநிஷ்யேSஹம் இதி ப்ருவாண: திரோதிதா: பர்ஹிஷி விச்வமூர்த்தே அபிஷ்டுத: தத்ர முநீச்வரை: த்வம் ராஜ்ஞ: ஸ்வதுல்யம் ஸுதம் அர்த்யமான: ஸ்வயம் ஜநிஷ்யே அஹம் இதி ப்ருவாண: திரோதிதா: பர்ஹிஷி விச்வமூர்த்தே अभिष्टुतस्तत्र मुनीश्वरैस्त्वं राज्ञा स्वतुल्यं सुतमर्थ्यमानः । स्वयं जनिष्येऽहमिति ब्रुवाण - स्तिरोदधा बर्हिषि विश्वमूर्ते

குருவாயூரப்பா! விச்வத்தின் உருவமே! யாகத்தில் தோன்றிய முனிவர்கள் உன்னைப் பலவாக ஸ்தோத்ரம் செய்தனர். அவர்கள் உன்னிடம், அரசனான நாபிக்கு உன்னைப் போன்று ஒரு மகன் வேண்டும் என்று யாசித்தனர். (அவன் போல் வேண்டும் என்றால் நிகரில்லாத அவன்தானே வரமுடியும்) ஆகையால் நீ அவர்களிடம், “நான் அப்படியே பிறக்கிறேன்”, என்று கூறி அக்னியில் மறைந்தாய் அல்லவா?