Sriman Narayaneeyam - Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம் (ச்லோகம் 200)

Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம்

ப்ரயவ்ரதஸ்ய ப்ரிய புத்ரபூதாத் ஆக்நீத்ர ராஜாதுதித: ஹி நாபி: த்வாம் த்ருஷ்டவாநிஷ்டதமிஷ்டி மத்யே தவைவ துஷ்ட்யை க்ருதயஜ்ஞ கர்மா ப்ரயவ்ரதஸ்ய ப்ரிய புத்ரபூதாத் ஆக்நீத்ர ராஜாத் உதித: ஹி நாபி: த்வாம் த்ருஷ்டவாந் இஷ்டதம் இஷ்டி மத்யே தவ ஏவ துஷ்ட்யை க்ருத யஜ்ஞ கர்மா प्रियव्रतस्य प्रियपुत्रभूता - दाग्नीध्रराजादुदितो हि नाभिः । त्वां दृष्टवानिष्टदमिष्टमध्ये तवैव तुष्ट्यै कृतयज्ञकर्मा

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! (மநுவின் புத்திரன் ப்ரியவ்ரதன் என்பவன்; இவன் துருவனின் தந்தையான உத்தானபாதனின் மூத்த சகோதரன் ஆவான்). ப்ரியவ்ரதனின் புத்திரனான ஆக்நீத்ரன் என்பவனின் புத்திரன் நாபி என்பவன் ஆவான். இவன் உன்னை மகிழ்விக்கவே பல யாகங்கள் இயற்றினான். அப்போது அந்த யாகங்கள் நடுவில் கேட்பதைத் தருகின்ற உன்னைக் கண்டான் அல்லவா? (விளக்கம் காண்க).

ஸ்ரீமத்பாகவதத்தின் ஐந்தாம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 1 முதல் 6 முடிய, இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளன.