Sriman Narayaneeyam - Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள் (ச்லோகம் 198)
Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள்
ததச்ச தே பூதலரோதிநஸ்தரூன் க்ருதா தஹந்தோ த்ருஹிணேந வாரிதா: த்ருமைச்ச தத்தாம் தநயாமவாப்ய தாம் த்வதுக்த காலம் ஸுகிநோSபிரேமிரே தத: ச தே பூ தல ரோதிந: தரூன் க்ருதா தஹந்த: த்ருஹிணேந வாரிதா: த்ருமை: ச தத்தாம் தநயாம் அவாப்ய தாம் த்வத் உக்த காலம் ஸுகிந: அபிரேமிரே ततश्च ते भूतलरोधिनस्तरून्कृधा दहन्तो द्रुहिणेन वारिताः । द्रुमैश्च दत्तां तनयामवाप्य तां त्वदुक्तकालं सुखिनोऽभिरेमिरे
குருவாயூரப்பா! (தவம் முடிந்து குளத்தை விட்டு மேலே வந்த ப்ரசேதஸர்கள் ) எங்கும் மரங்களாக உள்ளதைப் பார்த்தனர். நடக்கக் கூட இடம் இன்றி இருந்தது. இதனால் கோபம் கொண்ட அவர்கள் மரங்களை தீயினால் அழிக்கத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள் ப்ரும்மாவால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனைக் கண்டு மகிழ்வுற்ற மரங்கள் தங்கள் பெண்ணை ப்ரசேதஸர்களுக்கு மணம் செய்து கொடுத்தன. நீ குறிப்பிட்ட காலம் வரையில் அவர்களும் சுகமாக வாழ்ந்தனர்.