Sriman Narayaneeyam - Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள் (ச்லோகம் 197)
Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள்
அவாப்ய காந்தாம் தநயாம் மஹீருஹாம் தயா ரமத்வம் தசலக்ஷ வத்ஸரீம் ஸுதோSஸ்து தக்ஷ: நநு தத்க்ஷணாச்ச மாம் ப்ரயாஸ்யதேதி ந்யகதோ முதைவ தாந் அவாப்ய காந்தாம் தநயாம் மஹீருஹாம் தயா ரமத்வம் தசலக்ஷ வத்ஸரீம் ஸுத: அஸ்து தக்ஷ: நநு தத் க்ஷணாத் ச மாம் ப்ரயாஸ்யத இதி ந்யகத: முதா ஏவ தாந் अवाप्य कान्तां तनयां महीरुहां तया रमध्वं दशलक्शवत्सरीम् । सुतोऽस्तु दक्षो ननु तत्क्षणाच्च मां प्रयास्यथेति न्यगदो मुदैव तान्
குருவாயூரப்பா! “வனதேவதைகளாக உள்ள மரங்களின் மகளான வர்க்ஷீ என்பவளை மனைவியாக நீங்கள் அடைவீர்கள். அவளுடன் பத்து லட்சம் வருடம் இன்பமாக இருப்பீர்கள். அவள் மூலமாக தக்ஷன் என்பவன் பிறப்பான். அந்த நேரத்தில் நீங்கள் என்னை வந்து அடைவீர்கள்”, என்றும் அவர்களை நோக்கி நீ கூறினாய்.