Sriman Narayaneeyam - Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள் (ச்லோகம் 196)
Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள்
ப்ரஸேதசாம் தாவதயாசதாமபி த்வமேவ காருண்யபராத் வராநதா: பவத் விசிந்தாSபி சிவாய தேஹிநாம் பவத்வஸௌ ருத்ரநுதிச்ச காமதா ப்ரஸேதசாம் தாவத் அயாசதாம் அபி த்வம் ஏவ காருண்ய பராத் வராந் அதா: பவத் விசிந்தா அபி சிவாய தேஹிநாம் பவது அஸௌ ருத்ரநுதி: ச காமதா प्रचेतसां तावदयाचतामपिः त्वमेव कारुण्यभराद्वारानदाः । भवद्विचिन्ताऽपि शिवाय देहिनां भवत्वसौ रुद्रनुतिश्च कामदा
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! (நீ முன்னால் நின்றபோதும் கூட) ப்ரசேதஸர்கள் உன்னிடம் எதுவும் வரங்களாகக் கேட்கவில்லை. ஆனாலும் உனது கருணையால் அவர்களுக்கு நீ வரங்களை அளித்தாய். அந்த வரங்கள் என்ன? ப்ரசேதஸர்களான உங்களை நினைப்பவர்களுக்கு அனைத்து மங்களங்களும் கிடைக்கும் என்றும், ருத்ரகீதத்தைப் படிப்பவர்களுக்கு வேண்டுவன கிட்டும் என்றும் நீ வரம் அளித்தாய்.