Sriman Narayaneeyam - Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள் (ச்லோகம் 193)

Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள்

ஸ்தவம் ஜபந்தஸ்தமமீ ஜலந்தரே பவந்தமாஸே விஷதாயுதம் ஸமா: பவத் ஸுகாஸ்வாத ரஸாதமீஷ்வியாந் பபூவ காலோ த்ருவவந்ந சீக்ரதா ஸ்தவம் ஜபந்த: தம் அமீ ஜலந்தரே பவந்தம் ஆஸேவிஷத அயுதம் ஸமா: பவத் ஸுக ஆஸ்வாத ரஸாத் அமீஷு இயான் பபூவ கால: த்ருவவத் ந சீக்ரதா स्तवं जपन्तस्तममी जलान्तरे भवन्तमासेविषतायुतं समाः । भवत्सुखास्वादरसादमीष्वियान् बभूव कलो ध्रुववन्न शीघ्रता

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அவர்களும் அந்த ருத்ர கீதத்தை குளத்தின் நடுவே நின்று கொண்டு பதினாயிரம் வருடங்கள் ஜபித்தபடி உன்னை வணங்கினர். உனது ஆனந்தத்தில் இவர்கள் மூழ்கியபடி ஜபம் செய்ததால், துருவனைப் போன்று சீக்கிரமாக உனது தரிசனம் கிட்டவில்லை.