Sriman Narayaneeyam - Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள் (ச்லோகம் 192)

Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள்

ததா பவத்தீர்த்தமிதம் ஸமாகத: பவோ பவத் ஸேவக தர்சனாத்ருத: ப்ரகாசமாஸாத்ய புர: ப்ரசேதஸாம் உபதிசத் பக்த தமஸ்தவ ஸ்தவம் ததா பவத் தீர்த்தம் இதம் ஸமாகத: பவ: பவத் ஸேவக தர்சன ஆத்ருத: ப்ரகாசம் ஆஸாத்ய புர: ப்ரசேதஸாம் உபதிசத் பக்ததம: தவ ஸ்தவம் तदा भवत्तीर्थमिदं समागतो भवो भवत्सेवकदर्शनादृतः । प्रकाशमासाद्य पुरः प्रचेतसा – मुपादिशद्भक्ततमस्तवस्तवम्

குருவாயூரப்பா! அந்த நேரத்தில் உன்னுடைய தீர்த்தமான அந்த குளத்திற்கு சிவன் வந்தார். உன்னுடைய பக்தர்களில் மிகவும் உயர்ந்தவரான சிவபெருமான், ப்ரசேதஸர்கள் முன்னால் நின்று அவர்களுக்கு ருத்ரகீதம் உபதேசித்தார். (இங்கு குறிப்பிடப்பட்ட குளமானது குருவாயூரில் உள்ள நாராயண சரஸ் என்பதில் ஐயம் இல்லை. அதிலும் குறிப்பாக “இதம்” என்ற பதம் “இங்கு” என்ற பொருளில் உள்ளது. நாராயண பட்டத்ரி அமர்ந்து எழுதிய இடம் குருவாயூர் என்பதால், அந்தக் குளம் குருவாயூரின் குளமே ஆகும்).