Sriman Narayaneeyam - Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள் (ச்லோகம் 191)

Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள்

பிது: ஸிஸ்ருக்ஷா நிரதஸ்ய சாஸநாத் பவத்தபஸ்யாபிரதா தசாபி தே பயோநிதிம் பச்சிமமேத்ய தத்தடே ஸரோவரம் ஸந்தத்ருசுர்மநோஹரம் பிது: ஸிஸ்ருக்ஷா நிரதஸ்ய சாஸநாத் பவத் தபஸ்யா அபிரதா தச அபி தே பயோநிதிம் பச்சிமம் ஏத்ய தத் தடே ஸரோவரம் ஸந்தத்ருசு: மநோஹரம் पितुः सिसृक्षानिरतस्य शासनात् भवत्तपस्याभिरता दशापि ते । पयोनिधिं पश्चिममेत्य तत्तटे सरोवरं सन्ददृशुर्मनोहरम्

குருவாயூரப்பா! (இந்த உலகில் பல ப்ரஜைகளை உண்டாக்கவேண்டும் என்று) ஸ்ருஷ்டியில் (பல யாகங்கள் மூலமாக ஸ்ருஷ்டி) ஈடுபட்டிருந்த தங்கள் தந்தையான ப்ராசீனபர்ஹிஸின் சொல்லைக் கேட்டு, உன்னைக் குறித்துத் தவம் இயற்ற ப்ரசேதஸர்கள் பத்து பேரும் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் மேற்கில் உள்ள கடலை அடைந்து, அங்கு அதன் கரையில், கண்டவர் மனம் கவரும் வகையில் அழகுடன் காணப்பட்ட சிறந்த குளம் ஒன்றைப் பார்த்தனர்.