Sriman Narayaneeyam - Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள் (ச்லோகம் 190)

Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள்

ப்ருதோஸ்து நப்தா ப்ருது தர்ம கர்மட: ப்ராசீனபர்ஹிர்யுவதௌ சதத்ருதௌ ப்ரசேதஸோ நாம ஸுசேதஸ: ஸுதாந் அஜீஜனத்த்வத் கருணாங்குராநிவ ப்ருதோ: து நப்தா ப்ருது தர்ம கர்மட: ப்ராசீனபர்ஹி: யுவதௌ சதத்ருதௌ ப்ரசேதஸோ நாம ஸுசேதஸ: ஸுதாந் அஜீஜனத் த்வத் கருணா அங்குராந் இவ पृथोस्तु नप्ता पृथुधर्मकर्मठः प्राचीनबर्हिर्युवतौ शतदॄतौ । प्रचेतसो नाम सुचेतसस्सुतान – जीजनत्त्वत्करुणाङ्कुरानिव

குருவாயூரப்பா! ப்ருதுவின் தர்மத்தை நழுவாமல் கடைபிடித்தவனும், தனது கர்மங்களை சரிவரச் செய்தவனும், ப்ருதுவின் பேரனுடைய மகனுமான (ப்ருதுவின் கொள்ளுப்பேரன்) விளங்கியவன் ப்ராசீனபர்ஹிஸ் என்ற அரசன் ஆவான். அவன் சதத்ருதி என்பவள் மூலமாக, உனது கருணையே முளைவிட்டது போல், மிகுந்த ஞானம் படைத்த ப்ரசேதஸர்கள் என்னும் பெயர் கொண்ட பத்து குழந்தைகளைப் பெற்றான் அல்லவா? (விளக்கம் காண்க).

ஸ்ரீமத்பாகவதத்தின் நான்காம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 24 முதல் 31 முடிய, இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளன.