Sriman Narayaneeyam - Dasaka 18 - ப்ருது அவதாரம் (ச்லோகம் 189)

Dasaka 18 - ப்ருது அவதாரம்

விஜ்ஞாநம் ஸநகமுகோதிதம் ததாந: ஸ்வாத்மாநம் ஸ்வயமகமோ வநாந்தஸேவீ தத்தாக்ருக் ப்ருது வபுரீச ஸத்வரம் மே ரோகௌகம் ப்ரசமய வாதகேஹ வாஸின் விஜ்ஞாநம் ஸநக முக உதிதம் ததாந: ஸ்வ ஆத்மாநம் ஸ்வயம் அகம: வந அந்த ஸேவீ தத் தாக்ருக் ப்ருது வபு: ஈச ஸத்வரம் மே ரோகௌகம் ப்ரசமய வாதகேஹவாஸின் विज्ञानं सनकमुखोदितं दधान - स्स्वात्मानं स्वयमगमो वनान्तसेवी । तत्तादृक्पृथुवपुरीश ! सत्वरं मे रोगौघं प्रशमय वातगेहवासिन्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஸநத்குமாரரால் உபதேசம் செய்யப்பட்ட ஞானத்தை நீ கைக்கொண்டு காட்டிற்குள் சென்று விட்டாய். அங்கு நீ ப்ரஹ்மத்தை உணர்ந்தாய். இப்படியாக ப்ருகுவின் உருவம் எடுத்தவனே! குருவாயூரில் உள்ளவனே! ஈசனே! எனது வ்யாதிகளை நீ சீக்கிரமாக நீக்க வேண்டும்.***