Sriman Narayaneeyam - Dasaka 18 - ப்ருது அவதாரம் (ச்லோகம் 188)

Dasaka 18 - ப்ருது அவதாரம்

தத்தத்தம் வரமுபலப்ய பக்திமேகாம் கங்காந்தே விஹிதபத: கதாபி தேவ ஸத்ரஸ்த்தம் முநிநிவஹம் ஹிதாநி சம்ஸன் ஐக்ஷிஷ்டா: ஸநகமுகாந் முநீந் புரஸ்தாத் தத் தத்தம் வரம் உபலப்ய பக்திம் ஏகாம் கங்கா அந்தே விஹித பத: கதாபி தேவ ஸத்ரஸ்த்தம் முநி நிவஹம் ஹதாநி சம்ஸன் ஐக்ஷிஷ்டா: ஸநகமுகாந் முநீந் புரஸ்தாத் तद्दत्तं वरमुपलभ्य भक्तिमेकां गङ्गान्ते विहितपदः कदापि देव । सत्रस्थं मुनिनिवहं हितानि शंस - न्नैक्षिष्ठास्सनकमुखान् मुनीन् पुरस्तात्

குருவாயூரப்பனே! பக்தியை மட்டுமே மஹாவிஷ்ணுவிடம் இருந்து வரமாகக் கேட்டாய். பின்னர் கங்கை, யமுனையின் சங்கமத்தில் வசித்து வந்தாய். ஒரு சமயம் அங்கு ஸத்ர யாகம் நடத்திய முனிவர்களுக்கு நீ பலவும் உபதேசம் செய்தாய். அப்போது அங்கு வந்த ஸனகாதி முனிவர்களை நீ பார்த்தாய் அல்லவா?