Sriman Narayaneeyam - Dasaka 18 - ப்ருது அவதாரம் (ச்லோகம் 187)
Dasaka 18 - ப்ருது அவதாரம்
தேவேந்த்ரம் முஹுரிதி வாஜிநம் ஹரந்தம் வந்ஹௌ தம் முநிவர மண்டலே ஜுஹுஷௌ ருந்தாநே கமலபவே க்ரதோ: ஸமாப்தௌ ஸாக்ஷாத்த்வம் மதுரிபுமைக்ஷதா: ஸ்வயம் ஸ்வம் தேவேந்த்ரம் முஹு: இதி வாஜிநம் ஹரந்தம் வந்ஹௌ தம் முநிவர மண்டலே ஜுஹுஷௌ ருந்தாநே கமலபவே க்ரதோ: ஸமாப்தௌ ஸாக்ஷாத் த்வம் மதுரிபும் ஐக்ஷதா: ஸ்வயம் ஸ்வம் देवेन्द्रं मुहुरिति वाजिनं हरन्तं वह्नौ तं मुनवरमण्डले जुहूषौ । रुन्धाने कमलभवे क्रतोस्समाप्तौ साक्षात्त्वं मधुरिपुमैक्षथास्स्वयं स्वम्
குருவாயூரப்பா! இந்த்ரன் தோற்கடிக்கப்பட்டான் என்றாலும், அவன் மீண்டும் மீண்டும் யாகசாலைக்கு வந்து குதிரையை அபகரிக்க முயன்றான். இதனைக் கண்ட முனிவர்கள் கோபம் கொண்டு இந்திரனை யாகத்தீயில் அவிர்பாகமாக அளிக்க முடிவு செய்தனர். அதனை ப்ரும்மா வந்து தடுத்தான். அப்போது நீ உன்னையே எங்கும் நிறைந்துள்ள மஹாவிஷ்ணுவாகக் கண்டாய் அல்லவா?