Sriman Narayaneeyam - Dasaka 18 - ப்ருது அவதாரம் (ச்லோகம் 186)
Dasaka 18 - ப்ருது அவதாரம்
ஆத்மாநம் யஜதி மகைஸ்த்வயி த்ரிதாமந் ஆரப்தே சததமே வாஜி மேத யாகே ஸ்பர்த்தாலு: சதமக ஏத்ய நீசவேஷோ ஹ்ருத்வாSச்வம் தவ தநயாத் பராஜிதோSபூத் ஆத்மாநம் யஜதி மகை: த்வயி த்ரிதாமந் ஆரப்தே சததமே வாஜி மேத யாகே ஸ்பர்த்தாலு: சதமக: ஏத்ய நீசவேஷ: ஹ்ருத்வா அச்வம் தவ தநயாத் பராஜித: அபூத் आत्मानं यहति मखैस्त्वयि त्रिधाम - न्नारब्धे शततमवाजिमेधयागे । स्पर्धालुश्शतमख एत्य नीचवेषो हृत्वाऽश्वं तव तनयात् पराजितोऽभूत्
குருவாயூரப்பா! மூன்று மூர்த்திகளான ப்ரும்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் உருவமே (த்ரிதாமன்)! ப்ருதுவான நீ, பல அச்வமேத யாகங்களை இயற்றினாய். அதில் உன்னையே ஆராதனை செய்யும்படியும் செய்தாய். இப்படியாக நீ நூறாவது அச்வமேத யாகம் செய்யத் தொடங்கும்போது இந்த்ரன் ஒரு கேவலமான வேடம் தரித்து அங்கு வந்தான். அவன் உன்னுடைய யாகக்குதிரையை அபகரித்தான். அப்போது உனது மகனால் அந்தக் குதிரை மீட்கப்பட்டபோது, இந்திரன் தோற்றான். இதனால் அவனை (ப்ருதுவின் மகனை) விஜிதாச்வன் என்று அழைத்தனர்.