Sriman Narayaneeyam - Dasaka 18 - ப்ருது அவதாரம் (ச்லோகம் 185)

Dasaka 18 - ப்ருது அவதாரம்

பூயஸ்தாம் நிஜ குல முக்ய வத்ஸயுக்தை: தேவாத்யை: ஸமுசித சாரு பாஜநேஷு அன்னாதீந்யபிலஷிதானி யானி தானி ஸ்வச்சந்தம் ஸுரபிதநூமதூதுஹஸ்த்வம் பூய: தாம் நிஜ குல முக்ய வத்ஸ யுக்தை: தேவ ஆத்யை: ஸமுசித சாரு பாஜநேஷு அன்னாதீனி அபிலஷிதானி யானி தானி ஸ்வச்சந்தம் ஸுரபி தநூம் அதூதுஹ: த்வம் भूयस्तां निजकुलमुख्यवत्सयुक्तै र्देवाद्यैस्समुचितचारुभाजनेषु । अन्नादीन्यभिलषितानि यानि तानि स्वच्छन्दं सुरभितनूमदूदुहस्त्वम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் பூமியானது காமதேனு போல் உருவம் கொண்டது. (அந்த பசுவில் இருந்த பாலை எடுக்க - வளங்களை எடுக்க) நீ உனது குலத்தில் உள்ள முக்கியமானவர்களைக் கன்றுகளாக மாற்றி, அவர்களுக்கு உரிய பாத்திரங்களில் அன்னம் போன்று அவரவர்க்கு எது தேவையோ அதனைக் கறந்து அளித்தாய் அல்லவா?