Sriman Narayaneeyam - Dasaka 18 - ப்ருது அவதாரம் (ச்லோகம் 184)

Dasaka 18 - ப்ருது அவதாரம்

விக்யாத: ப்ருதுரிதி தாபஸோபதிஷ்டை: ஸூதாத்யை: பரிணுதபாவி பூரிவீர்ய: வேனார்த்யா கபலித ஸம்பதம் தரித்ரீம் ஆக்ராந்தம் நிஜ தநுஷா ஸமாமகர்ஷீ: விக்யாத: ப்ருது: இதி தாபஸ பதிஷ்டை: ஸூத ஆத்யை: பரிணுத பாவி பூரி வீர்ய: வேன ஆர்த்யா கபலித ஸம்பதம் தரித்ரீம் ஆக்ராந்தம் நிஜ தநுஷா ஸமாம் அகர்ஷீ: विख्यातः पृथुरिति तापसोपदिष्टैः सूताद्यैः परिणुतभाविभूरिवीर्यः । वेनार्त्या कबलितसम्पदं धरित्री - माक्रान्तां निजधनुषा समामकार्षीः

குருவாயூரப்பா! ப்ருது என்று பெயரும் புகழும் அடைந்த நீ எப்படி விளங்கினாய்? முனிவர்கள் பலரும், ஸூதர்கள் என்பவர்களாகிய ஸ்துதி பாடல்கள் பாடுபவர்களைக் கொண்டு உனது எதிர்கால லீலைகளைப் பாடப் பெற்றவனாக இருந்தாய். வேனனது கொடிய செயல்களால் அனைத்து வளங்களையும் பூதேவி மறைத்து வைத்திருந்தாள் மேடு பள்ளங்களாக உள்ள பூமியை கண்டு கோபம் கொண்ட நீ, உனது வில்லினால் அந்தப் பூமியை சமதரையாக்கினாய் அல்லவா?