Sriman Narayaneeyam - Dasaka 18 - ப்ருது அவதாரம் (ச்லோகம் 181)

Dasaka 18 - ப்ருது அவதாரம்

பாபோSபி க்ஷிதி தல பாலனாய வேந: பௌராத்யைருபநிஹித: கடோர வீர்ய: ஸர்வேப்யோ நிஜபலமேவ ஸம்ப்ரசம்ஸன் பூசக்ரே தவ யஜநாந்யயம் ந்யரௌத்ஸீத் பாப: அபி க்ஷிதி தல பாலனாய வேன: பௌராத்யை: உபநிஹித: கடோர வீர்ய: ஸர்வேப்ய: நிஜ பலம் ஏவ ஸம்ப்ரசம்ஸந் பூசக்ரே தவ யஜநாநி அயம் ந்யரௌத்ஸீத் पापोऽपि क्षितितलपालनाय वेनः पौराद्यैरुपनिहितः कठोरवीर्यः । सर्वेभ्यो निजबलमेव संप्रशंसन् भूचक्रे तव यजनान्ययं न्यरौत्सीत्

குருவாயூரப்பா! மிகவும் கொடூரமான வீரம் உடையவனாகவும், பாவத்தை உடையவனாகவும் வேனன் இருந்தான். அப்படி இருந்தபோதிலும் நாட்டை ஆளும் நிலைக்காக, அந்நாட்டு மக்களால் பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டான். அவன் அனைவரிடமும் தனது வீரதீரங்களைப் பற்றியே புகழ்ந்து பேசியவண்ணம் இருந்தான். மேலும் உலகில் உனக்காக நடைபெறும் யாகங்கள் போன்றவற்றை தடை செய்தான்.