Sriman Narayaneeyam - Dasaka 18 - ப்ருது அவதாரம் (ச்லோகம் 180)
Dasaka 18 - ப்ருது அவதாரம்
ஜாதஸ்ய த்ருவகுல ஏவ துங்ககீர்த்தே: அங்கஸ்ய வ்யஜநி ஸுத: ஸ வேநநாமா யத்தோஷ வ்யதிதமதி: ஸ ராஜவர்ய: த்வத்பாதே விஹிதமநா வநம் கதோSபூத் ஜாதஸ்ய த்ருவ குல ஏவ துங்க கீர்த்தே: அங்கஸ்ய வ்யஜநி ஸுத: ஸ வேந நாமா யத் தோஷ வ்யதித மதி: ஸ ராஜவர்ய: த்வத் பாதே விஹிதமநா வநம் கத: அபூத் जातस्य ध्रुवकुल एव तुङ्गकीर्ते - रङ्गस्य व्यजनि सुतः स वेननामा । तद्दोषव्यथितमतिः स राजवर्य - स्त्वत्पादे विहितमना वनं गतोऽभूत्
குருவாயூரப்பா! துருவனின் குலத்தில் தோன்றியவனும், மிகுந்த புகழைப் பெற்றவனும் ஆகிய அங்கன் என்பவனுக்கு, வேனன் என்ற பெயர் கொண்ட மகன் பிறந்தான். வேனனுடைய தீய நடத்தையைக் கண்டு மனம் நொந்துபோன அங்கன், உன் திருவடிகளில் மனம் செலுத்தப்பட்டவனாகக் காட்டிற்குச் சென்றான் அல்லவா? (விளக்கம் காண்க)
ஸ்ரீமத்பாகவதத்தின் நான்காம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 13 முதல் 23 முடிய, இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளன.