Sriman Narayaneeyam - Dasaka 17 - துருவ சரிதம் (ச்லோகம் 179)
Dasaka 17 - துருவ சரிதம்
அந்தே பவத்புருஷநீத விமாநயாதோ மாத்ரா ஸமம் த்ருவபதே முதிதோSயமாஸ்தே ஏவம் ஸ்வருப்த்யஜநபாலந லோலதீஸ்த்வம் வாதாலயாதிப நிருத்தி மமாமயௌகான் அந்தே பவத் புருஷ நீத விமாந யாத: மாத்ரா ஸமம் த்ருவபதே முதித: அயம் ஆஸ்தே ஏவம் ஸ்வ ருப்த்ய ஜந பாலந லோல தீ: த்வம் வாதாலயாதிப நிருத்தி மம ஆமய ஔகான் अन्ते भवत्पुरुषनीतविमानयातो मात्रा समं ध्रुवपदे मुदितोऽयमास्ते । एवं स्वभृत्यजनपालनलोलधीस्त्वं वातालयाधिप ! निरुन्धि ममामयौघान्
குருவாயூரின் அதிபதியே! குருவாயூரப்பா! தனது ஆட்சியின் முடிவில், உனது தூதர்களால் அழைத்து வரப்பட்ட விமானத்தில் ஏறிக்கொண்டு, தனது தாயுடன் துருவ மண்டலத்தில் என்றும் ஆனந்தமாக உள்ளான். இப்படியாக உனது அடியார்களைக் காக்கும் மனம் படைத்த நீ, என்னுடைய வியாதிகளை நீக்க வேண்டும்.***