Sriman Narayaneeyam - Dasaka 17 - துருவ சரிதம் (ச்லோகம் 178)

Dasaka 17 - துருவ சரிதம்

யக்ஷேண தேவ நிஹதே புநருத்தமேSஸ்மிந் யக்ஷை: ஸ யுத்த நிரதோ விரதோ மநூக்த்யா சாந்த்யா ப்ரஸந்ந ஹ்ருதயாத்தநதாதுபேதாத் த்வத் பக்திமேவ ஸுத்ருடாமவ்ருணோதந்மஹாத்மா யக்ஷேண தேவ நிஹதே புந: உத்தமே அஸ்மிந் யக்ஷை: ஸ யுத்த நிரத: விரத: மந உக்த்யா சாந்த்யா ப்ரஸந்ந ஹ்ருதயாத் தநதாத் உபேதாத் த்வத் பக்திம் ஏவ ஸுத்ருடாம் அவ்ருணோத் மஹாத்மா यक्षेण देव निहते पुनरुत्तमेऽस्मिन् यक्षैः स युद्धनिरतो विरतो मनूक्त्या । शान्त्या प्रसन्नहृदयाद्धनदादुपेता - त्त्वद्भक्तिमेव सुदृढामवृणोन्महात्मा

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒருமுறை காட்டிற்கு வேட்டையாடச் சென்ற துருவனின் சகோதரன் (இளையதாயின் மகன்) உத்தமனை, யக்ஷன் ஒருவன் கொன்று விட்டான். அப்போது இதனைக் கேள்விப்பட்ட துருவன் யக்ஷர்களுடன் போர் புரியத் தொடங்கினான். ஆனால் அப்போது மநு துருவனிடம் தோன்றி போரை நிறுத்துமாறு அறிவுரை செய்தவுடன் போரை நிறுத்தினான். இதனைக் கண்டு மனம் மகிழ்ந்த யக்ஷர்களின் அரசனான குபேரன் துருவனிடம் வந்தான். அவனிடம் துருவன், என்றும் நீங்காமல் உள்ளதும், உன்னைக் குறித்தே உள்ளதும் ஆகிய பக்தியே வேண்டும் என்று கேட்டான்.