Sriman Narayaneeyam - Dasaka 17 - துருவ சரிதம் (ச்லோகம் 177)
Dasaka 17 - துருவ சரிதம்
இத்யூசுஷி த்வயி கதே ந்ருப நந்தனோSஸௌ ஆநந்திதாகில ஜந: நகரீமுபேத: ரேமே சிரம் பவதநுக்ரஹ பூர்ணகாம: தாதே கதே ச வநமாத்ருத ராஜ்யபார: இதி ஊசுஷி த்வயி கதே ந்ருபநந்தன: அஸௌ ஆநந்தித அகில ஜந: நகரீம் உபேத: ரேமே சிரம் பவத் அநுக்ரஹ பூர்ண காம: தாதே கதே ச வநம் ஆத்ருத ராஜ்யபார: इत्यूचिषि त्वयि गते नृपनन्दनोऽसौ आनन्दिताखिलजनो नगरीमुपेतः । रेमे चिरं भवदनुग्रहपूर्णकामस् ताते गते च वनमादृतराज्यभारः
குருவாயூரப்பா! இப்படியாக அவனுக்கு நல்வார்த்தைகள் கூறியபின் நீ சென்றுவிட்டாய். அதன் பின்னர் துருவன் மகிழ்வுடன் தன்னை வரவேற்ற மக்களைக் கொண்டவனாக தனது நாட்டிற்குத் திரும்பினான். உனது க்ருபையால் அவனுக்கு விருப்பப்பட்டவை அனைத்தும் நிறைவேறின. அவன் தந்தை தவம் செய்ய காட்டிற்குப் புறப்பட்டார். அப்போது துருவன் அரசாட்சியை ஏற்று நீண்ட காலம் அனுபவித்தான்.