Sriman Narayaneeyam - Dasaka 17 - துருவ சரிதம் (ச்லோகம் 176)
Dasaka 17 - துருவ சரிதம்
தாவத் விபோத விமலம் ப்ரணுவந்தமேநம் ஆபாஷதாஸ்த்வமவகம்ய ததீய பாவம் ராஜ்யம் சிரம் ஸமநுபூய பஜஸ்வ பூய: ஸர்வோத்தரம் த்ருவ பதம் விநிவ்ருத்தி ஹீநம் தாவத் விபோத விமலம் ப்ரணுவந்தம் ஏநம் ஆபாஷதா: த்வம் அவகம்ய ததீய பாவம் ராஜ்யம் சிரம் ஸமநுபூய பஜஸ்வ பூய: ஸர்வோத்தரம் த்ருவ பதம் விநிவ்ருத்தி ஹீநம் तावद्विबोधविमलं प्रणुवन्तमेन - माभाषथास्त्वमवगम्य तदीयभावम् । राज्यं चिरं समनुभूय भजस्व भूयः सर्वोत्तरं ध्रुव पदं विनिवृत्तिहीनम्
குருவாயூரப்பா! (வேதவடிவான உனது சங்கு அவனைத் தொட்ட காரணத்தினால்) துருவனுக்கு ஞானம் பிறந்து தனது மாசுகள் நீங்கப்பெற்று உன்னைத் துதித்தான். அவன் உள்ளம் அறிந்த நீ (அவன் காட்டிற்கு வரும்போது நாடாளும் அரசனாக வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தான்) அவனிடம், “துருவனே! நீ நன்றாக ராஜ்ஜியத்தை ஆள்வாயாக! அதன் பின்னர் மறுபிறவி என்பது எடுத்துத் திரும்பி வராமல் உள்ள துருவபதம் என்பதை நீ அடைவாயாக!” என்று கூறினாய் அல்லவா?