Sriman Narayaneeyam - Dasaka 17 - துருவ சரிதம் (ச்லோகம் 175)
Dasaka 17 - துருவ சரிதம்
த்வத் தர்சன ப்ரமத பார தரங்கிதம் தம் த்ருக்ப்யாம் நிமக்நமிவ ரூபரஸாயநே தே துஷ்டூஷமாணமவகம்ய கபோலதேசே ஸம்ஸ்புருஷ்டவாநஸி தரேண ததாSSதரேண த்வத் தர்சன ப்ரமத பார தரங்கிதம் தம் த்ருக்ப்யாம் நிமக்நம் இவ ரூப ரஸாயநே தே துஷ்டூஷமாணம் அவகம்ய கபோல தேசே ஸம்ஸ்புருஷ்டவாந் அஸி தரேண ததா ஆதரேண त्वद्दर्शनप्रमदभारतरङ्गितं तं दृग्भ्यां निमग्नमिव रूपरसायने ते । तुष्टूषमाणमवगम्य कपोलदेशे संस्पृष्टवानसि दरेण तथाऽऽदरेण
குருவாயூரப்பா! உனது தரிசனம் கிடைக்கப் பெற்ற துருவன் ஆனந்தத்தினால் மயங்கி நின்றான். உனது அமிர்தம் போன்ற உருவத்தைக் கண்ட அவன் கண்களால் அதில் மூழ்கினான். உன்னைத் துதிக்கவும் எண்ணினான். (ஆனால் அவனுக்கு எப்படித் துதிப்பது என்று புரியவில்லை) இதனை உணர்ந்த நீ உனது பாஞ்சஜன்யத்தால் (சங்கு) அவனது கன்னங்களை மெதுவாக அன்புடன் தொட்டாய் அல்லவா?