Sriman Narayaneeyam - Dasaka 17 - துருவ சரிதம் (ச்லோகம் 174)

Dasaka 17 - துருவ சரிதம்

தாவத்தபோபல நிருச் வஸிதே திகந்தே தேவார்த்திதஸ்த்வமுதயத் கருணார்த்ர சேதா: த்வத்ரூப சித்ரஸ நிலீனமதே: புரஸ்தாத் ஆவிர்ப்பூவித விபோ கருடாதிரூட: தாவத் தபோ பல ந்ருச் வஸிதே திகந்தே தேவ அர்த்தித: த்வம் உதயத் கருணா ஆர்த்ர சேதா: த்வத் ரூப சித் ரஸ நிலீனமதே: புரஸ்தாத் ஆவிர்ப்பூவித விபோ கருட ஆதிரூட: तावत्तपोबलनिरुच्छ्वसिते दिगन्ते देवार्थितस्त्वमुदयत्करुणार्द्रचेताः । त्वद्रूपचिद्रसनिलीनमतेः पुरस्ता - दाविर्बभूविथ विभो गरुडाधिरूढः

குருவாயூரப்பா! துருவன் தனது மூச்சை அடக்கியவண்ணம் செய்த தவத்தினால் அனைத்துத் திசைகளில் உள்ளவர்களால் மூச்சுவிட இயலவில்லை. அப்படி அவர்கள் திணறியபோது தேவர்கள் உன்னிடம் வந்து வேண்டி நின்றனர். அவர்கள் வேண்டுகோளிலும், துருவனின் தவத்திலும் நீ மனம் நெகிழ்ந்தாய். உனது ஆனந்தமான ரூபத்தைத் தனது உள்ளத்தில் தரித்திருந்த துருவன் முன்பாக நீ கருடன் மீது அமர்ந்தபடி தோன்றினாய் அல்லவா?